நம்மை தூங்க விடாமல் செய்யும் மன அழுத்தத்தை வெல்லும் வழிகள்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வரும் அதை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவர் .சிலர் அழுது வெளியாக்குவர் ,இன்னும் சிலர் சிரித்து வெளிப்படுத்துவர் ,சிலர் அளவுக்கதிகமாக உணவு உண்பர் ,எனவே இந்த மன அழுத்தத்தை எப்படி வெல்லலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வேகமாக இதய துடிப்பு இருக்கும். ஆகவே 20 ஜம்பிங் ஜாக்குகள், 10 புஷ்அப்கள் அல்லது சிட்-அப்கள் அல்லது 30 நிமிடங்கள் நடந்தால் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கலாம் .
2.மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் மசாஜ் செய்தால் தசைகளில் உள்ள பதற்றத்தை சரிசெய்யும். 
3. உங்கள் உடலில் எந்த இடத்தில் நீங்கள் பதற்றமாக உணர்கிறீர்கள்  அந்த பகுதிகளை மசாஜ் செய்தால் மனஅழுத்தத்தினை குறைக்கலாம் 
4.மனஅழுத்தத்தில் இருப்பவர்கள்  இசைக்கு நடனமாடுவது நேர்மறையான நினைவுகளைத் தூண்டும், மேலும் மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.
5.மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் உடல் வெப்பநிலையை மாற்றுவதன் மூலம், குளிப்பது  முழு உணர்வின் வேகத்தைக் குறைக்கிறது. 
6.மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் வாசனையான சோப்பு அல்லது மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு குளிக்கலாம்.
7. திருப்திகரமான உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு உடலுறவு மன அழுத்தத்தை குறைக்கும்.
8.மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர  வீட்டை துப்பரவு செய்வதன் மூரம் மனதில் உள்ள அழுத்தம் குறைவடையும். மேலும் அதை மறந்து வேளையில் ஈடுபடுவீர்கள்.
9.மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு மனதில் தோன்றுவதை வரைந்து பார்த்துக்கொண்டிருந்தால் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவரலாம்.
10.அடுத்து  முழுமையான நிம்மதியா ஒரு தூக்கம் இருந்தாலே போதும். அனைத்துவிதமான மனஅழுத்தத்தில் இருந்தும் வெளிவர முடியும்.