சளி ,காய்ச்சலை விரட்டும் கஷாயம் தயாரிக்கும் முறை

 
cold

பொதுவாக  உங்கள் உடம்பில் எப்படிப்பட்ட சளி இருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இந்த கஷாயத்திற்கு உண்டு.கஷாயம் தயாரிக்கும் முறை .
1.இதற்கும் தேவையான பொருட்கள்: தண்ணீர்-ஒரு டம்ளர் மிளகு-15 (1/2 ஸ்பூன் அளவிற்கு) சீரகம்- 1/2 ஸ்பூன் அளவு
2.வர மல்லி தூள்-1/2ஸ்பூன் இஞ்சி-சிறிய துண்டு சமையல் மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை காம்பு கிள்ளிய வெற்றிலை-1 -
3.முதலில் ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

vetrilai
4.அதன் பின்பு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
5.மிளகையும், இஞ்சியையும் மட்டும் கல்லில் ஒன்றும் இரண்டுமாக நச்சு போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலையை சிறு துண்டுகளாக கிழித்து போட்டுக் கொள்ளவும். -
6.அதன் பின்பு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டும்வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
7.தண்ணீர் நன்றாக வற்றி, சுண்டி அரை டம்ளர் ஆன பின்பு, , அந்தத் தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிப்பது நல்ல பலனைத் தரும். .