உயிரை பறிக்கும் நோய்களை சூரையாடும் சூரை மீன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
சூரை மீன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்.
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளதால் இது ரத்த நாளங்களில் சமநிலை கொண்டு வர உதவுகிறது. இதனால் இருதய தமனிகளில் உள்ள கொழுப்பு குறைகிறது எனவே இருதயம் ஆரோக்கியமாக செயல்பட்டு உடல் முழுவதும் ரத்தத்தை சமமாக அனுப்ப முடிகிறது.




ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருதயத்தில் ஏற்படும் அலர்ஜி விளைவுகளை கட்டுப்படுத்துகிறது இதனால் ரத்த அழுத்தம் ,பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகிய வகைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது சூரை மீனில் துத்தநாகம் வைட்டமின் டி மற்றும் செலினியம் நிறைந்துள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
சூரை மீனில் கொழுப்புச் சத்துக்கள் குறைவாகவும் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதனை உணவில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை என்பது சரியாக பராமரிக்கப்படும்.
நமது உடலில் வைட்டமின் பி எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சூரை மீனில் அதிக அளவு வைட்டமின் பி இருப்பதால் எலும்பு முறிவு போன்ற விடயங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
எலாஸ்டின் என்ற புரதம் உள்ளது இது நம் சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் அதிகளவில் சூறை மீன் அல்லது ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்.
புற்றுநோயின் ஆபத்தை தடுக்கிறது சூரை மீன் இறைச்சியில் இருந்து வரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது.
இதனால் மார்பக புற்று நோய் மற்றும் சிறுநீரக புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
உங்கள் உடலை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது இது தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


