நல்லா தூங்குறவங்களை பார்த்து ஏங்கறீங்களா ?வாங்க உங்களுக்கும் தூங்க வழி சொல்றோம்

 
Sleeping

இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அவசியமானது தூக்கம் .ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் .ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் தூக்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் இரவில் கண் விழித்து தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறது .தூக்கத்திற்கு உணவருந்தும் நேரம் முக்கியம் .நாம் தூங்க ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்திருந்தால் வயிறு காலியாகி இருந்து தானாக தூக்கம் வரும் ,மேலும் தூக்கத்திற்கு இரவு நேரத்தில் குளித்தால் போதும் நல்லா தூக்கம் வரும்

sleep

மேலும் காலையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது இரவில் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்தல்  அல்லது 15 நிமிடம் தூங்குவதற்கு முன்பு நடைப் பயிற்சி செய்தல் போன்ற செயலால் நமக்கு தூக்க ஹார்மோன் தூண்டப்பட்டு நல்லா தூக்கம் வரும்

உடற்பயிற்சி செய்த பெண்கள் விரைவாகவும் மற்றும் அதிக நேரம் தூங்குவது  ஒரு ஆய்வு முடிவில் தெரிகிறது.

இரவு உணவிற்கு பின்பு தொலைபேசிக்கு பதிலளிப்பது போன்ற செயலால் தூக்கம் கெடுகிறது

மேலும் இரவு  பிடித்தமான பாடல்கள்  கேட்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்..

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அதிக காரத்தன்மை இல்லாத உணவை எடுத்துக்கொள்ளுங்கள்

மேற்சொன்ன வழிகளை பின்பற்றினால் ஆழ்ந்த தூக்கத்திற்கு கேரண்டி