தினம் விடிய விடிய தூங்காம இருக்கீங்களா ?சீக்கிரம் தூங்க சில டிப்ஸ்

 
Sleeping

 ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க முக்கியம் உணவு ,உறக்கம் ,இரண்டும் இருக்க வேண்டும் .முக்கியமாக சரியான தூக்கமில்லையென்றால் அது கடுமையான மன அழுத்தத்தினை உண்டு பண்ணி ,எந்த வேலையிலும் ஈடுபட முடியாதபடி செய்து விடும் .எனவே ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் அவசியம் .இப்படி தூக்கத்திற்கு சில ஆலோசனை வழங்குகிறோம்

sleep

1.

 உறங்கச் செல்லும் முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

2.படுக்கும் நேரத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கொண்டு அதை இருட்டில் இரண்டு நிமிடங்களுக்கு உற்று நோக்கினால் தூக்கம் கண்களை தழுவும் 

3. தியானம் மற்றும் யோகாசனம் செய்யுங்கள். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். நடைப்பயிற்சி செய்வது மனதை லகுவாக்கி, உடல் ஆற்றலைச் செலவழித்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.உறக்கம் முக்கியம். ஆகவே, அதைத் தியாகம் செய்து வீணாக சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவழித்து வாழ்க்கையைத் தொலைக்கக்கூடாது என்று உறுதி எடுப்பது நல்லது.. மேற்கண்ட முறையை பின்பற்றி நன்றாக தூங்கி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்