எந்த பக்கம் தலை வச்சி படுத்தால் என்னென்னெ பாதிப்பு வரும் தெரியுமா

 
Sleeping Sleeping

 

நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம். தூக்கம் மனிதனுக்கு எப்படி அவசியமோ, அதேபோல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அதேப் போல் தூங்கும் திசையையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். சரி வாருங்கள் இந்த பதிவில் நாம் எந்த திசையில் தூங்குவது நல்லது என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பனவற்றை காண்போம்.

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உள்ளது" பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்து வருகிறது.

ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச் செல்லும். ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக் கொள்ளும்.

நாம் வடக்கே தலை வைத்து படுத்தால், நம் உடலின் வடக்கு திசையும் பூமியின் வடக்கு திசையும் இணையும் போது ஓட்டுவது இல்லை எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

தெற்கே தலைவைத்துப் படுத்தால் நம் வட திசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

"புது மாப்பிளை தெற்கே தலைவைத்து படுக்க வேண்டும்" என கேரளாவில் பாட்டிமார்கள் கூறுவார்கள். ஏனென்றால் புது மாப்பிளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள். இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா? அதனால்.

கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும்.

ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல் பகுதி தெற்காகவும், தொப்புளுக்குக் கீழ் பகுதி வடக்காகவும் இருக்கும். இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல் நோக்கி இருக்க முடியும்.

பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காகவும். கீழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத் திசை அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி திரும்பும். அதனால் தான் தலை திரும்புகிறது.

எனவே தயவு செய்து வடக்கே தழை வைத்து படுக்கக் கூடாது. தெற்குத் திசை மிகவும் நல்லது. வாழ்வோம் ஆரோக்கியமாக…!