தீராத சைனஸ் பிரச்சினைக்கு சைட் எபக்ட் தரும் மாத்திரை சாப்பிடாமல் சரி செய்யும் சைனா வைத்தியம்

 
cold

சைனஸ் என்பது முகத்தின் எலும்பு அமைப்பில் இருக்கும் வெற்றிடமான குழியறைகள் ஆகும். முகத்தில் இரண்டு பக்கங்களிலும் தலா இரண்டு குழியறையாக நான்கு சைனஸ் குழியறைகள் உள்ளன. இந்த குழியறைகளை மூக்குடன் இணையும் வகையில் பாதை அமைப்பு உள்ளது. மூக்கு மற்றும் சைனஸ் குழியறைகளுக்கு காற்றும், மியூகஸ் எனப்படும் சளி, திரவம் போல் காணப்படும். இந்த பாதையில் ஒரு மெல்லிய சவ்வுப்படலம் காணப்படுகிறது.

மூக்குப்பகுதியை பாதிக்கும் எந்த ஒரு நோய்த் தொற்றும் இந்த சவ்வுப் படலத்தை தாக்கி, சைனஸ் பகுதியை தாக்குகிறது. நோய்க்கிருமிகள் தாக்கும்போது சைனஸ் குழியறைகளில் ஏராளமான சளி உருவாகி அந்த குழியறையை காற்று சென்று வெளியேற வழியின்றி அடைத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சைனஸ் குழிகளின் சுவற்றில் ஏற்படும் அழுத்தத்தால் வீக்கம் ஏற்படும், அப்போது அது முகம் சார்ந்த பகுதிகளில் கடுமையான வலியை உருவாக்கும். பொதுவாக, இது போல் சைனஸ் குழியறைகளில் ஏற்படும் நோய்த் தொற்று மற்றும் வலியை “சைனஸ் பாதிப்பு“ என்கிறோம்.


தலையாய பிரச்சினையாக உருவெடுக்கும் “சைனஸ் பாதிப்பு”

இதனை எவ்வாறு குணப்படுத்துவது ?

அதிக தண்ணீர் பருகுங்கள் :

உங்கள் உடல் அதிக நீர்ச்சத்தோடு இருப்பதால்  சளி நீர்த்து போகிறது. மூக்கடைப்புக்கு சரியாகிறது. வெந்நீரில் எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் தேன் சேர்த்து பருகலாம்.  க்ரீன் டீ போன்ற மூலிகை டீ பருகுவதால் தொண்டை மற்றும் மூக்கு தெளிவாகிறது.

நீராவி நுகர்வு :

நீராவியை நுகர்வதால் இந்த பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும். டீ ட்ரீ , லாவெண்டர் , தைல எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்யை சூடான தண்ணீரில் சேர்த்து ஆவியை நுகரலாம். இந்த எண்ணெய்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்  இருப்பதால் இவை தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது.

நாசியில் நீர்விடுவது:

இந்த முறையைக் கையாளுவதால் தலைவலி மற்றும் வீக்கம் குணமாகிறது. ஒரு நீள மூக்குடைய கெண்டியை எடுத்துக் கொள்ளவும். குழாய் நீரைப் பருகுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் கொல்லபப்டும்  ஆனால் மூக்கில் உள்ள கிருமிகள் அழிக்கப்படாது, எனவே சுத்தீகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம்.

இரண்டு கப்  சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

இந்த நீரில் அயோடின் சேர்க்கப்படாத உப்பு ½ ஸ்பூன் மற்றும் பேக்கிங் சோடா ½ ஸ்பூன் சேர்க்கவும்.

நன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஒரு சிறிய சிரிஞ் பயன்படுத்தி நாசிகளில் இந்த நீரை விடவும்

ஒரு நாளில் இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

வெந்நீர் ஒத்தடம்:

சைனஸ் பாதிப்பால் உண்டான வீக்கம், வலி மற்றும் அழுத்தத்தைக் குறைக்க முகத்திற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு  துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் தருவதால் வலி குறையும்.