மருந்து மாத்திரையில்லாமல் வாழ உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்

 
moolikai juice for health


1. மாம்பழத்தில் பல சத்துக்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளும் சாப்பிடலாம் 
.இதை இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் பெருகும்  தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.
முகம் வழுவழுப்பாக இருக்க சில சித்த மருத்துவ குறிப்புகள் 
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும். 
இரத்த சோகையை போக்க சில சித்தர்கள் சொன்ன மருத்துவம் 
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

mango

2.
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
 உடல் சக்தி பெற உடனடி தீர்வு :
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
 வெட்டுக்காயம் குணமாகவீரியமுள்ள வைத்யம் :
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
 சுகப்பிரவசமாக சூப்பர் சிகிச்சை 
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
உடல் அரிப்பு குணம் பெற உடனடி சிகிச்சை 
 வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

3. காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம் 
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. சிலந்தி கடிக்கு மருந்து:
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
 சீதபேதி குணமாக:
 புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.
வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

4.. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
. நுரையீரல் நோய்கள் குணமாக நொடி பொழுது சிகிச்சை 
 நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
 பேதி குணமாக ஆதி கால சிகிச்சை 
மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
 வாதநோய் குணமாக சித்தர்கள் கூறிய வழிகள் 
குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
. மலச்சிக்கல் சரியாக சித்த வைத்ய முறை 
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்