சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது எந்த நோயை உண்டாக்கும் தெரியுமா ?

 
red rice red rice

பொதுவாக பலரும் ஹோட்டலில் கூட அதிகம் காரம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டு அவஸ்தை படுகின்றனர் .அதிக காரம் சாப்பிடுவதால் என்ன நோய்களை நாம் சந்திக்க வேண்டி வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
 
1.சிலர் அதிகம் சிவப்பு மிளகாய் எடுத்து கொள்வர் .இப்படி சாப்பிடுவது  வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். 
2.இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி  ஏற்படும்.
3.சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். 
4.சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.  
5.சிவப்பு மிளகாயில் உள்ள அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. 
6.சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது. 
7.மேலும் கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது 
8.சிலருக்கு அல்சர் இருக்கும் .இதற்கு காரணம் சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது 
 9.சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் காணப்படுவதால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.