வெள்ளை சர்க்கரையால் உடலுக்கு இவ்ளோ தொல்லையா ?படிச்சா காபில போடாம கடலில் போடுவிங்க

 
sow sow health tips

தொழில்நுட்பம் `வளர்ச்சி’ என்ற பெயரில் உருவாக்கியதுதான் வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம். எப்படி புகை, மதுவைத் தடைசெய்யப்படவேண்டிய பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அப்படி வைக்கவேண்டிய பொருள் சர்க்கரை. ஆனால், இதுவோ உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டது. உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்துக்குத் தள்ளியதிலும், பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் இந்த வகைச் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது. 


. நீயூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம் நீராவி இன்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரைக்குமான வளர்ச்சி. அந்த தொழில் வளர்ச்சிதான் இந்தச் சர்க்கரை உருவாக்கக் காரணமானது. 

இனிப்பையோ, இனிப்பு உணவுகளையோ நாம் சாப்பிடாதவர்கள் அல்ல. விதவிதமாகச் சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய `இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியல் அதற்குச் சிறந்த உதாரணம். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால்... என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ள குறிப்பு உள்ளது. அவை அத்தனையும் அப்போது வெள்ளைச் சர்க்கரையில் அல்ல... வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. எந்த் வகையிலும் இந்த இயற்கை இனிப்புக்கு மாற்றாக வருவதற்குத் தகுதியே இல்லாத இந்தச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாக நம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. 

வெள்ளை சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும்.

சர்க்கரையில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறாமாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. மேலும் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..

வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம்! நலம் நல்லது-80 #DailyHealthDose

வெள்ளை சர்க்கரையில் உள்ள அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் உடல் சோர்வடையும் அதை சமன் செய்ய எலும்புகள் மற்றும் பற்களில் உள்ள கால்சியம் சத்து உறிஞ்சப்படும். இதனால் பல் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வந்து சேரும்.

குடலில் மட்டுமல்லாமல், பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடம்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்தம் அழுத்தம், புற்று நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

வெள்ளை சர்க்கரையில் உள்ள இன்சுலின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை வளர்ச்சியடைய செய்கிறது. தினமும் சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உண்டாவதற்கு இதுவே காரணியாக இருக்கிறது. இதயத்தின் நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தி அதனால் மாரடைப்பு, பக்கவாதம் முதலியவற்றை உருவாக்குகிறது.

நமது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோயை வலுவாக்குகிறது. சர்க்கரைக்கு பதிலாக ஆரோக்கியமான நாட்டு சர்க்கரை, வெள்ளம் போன்றவற்றை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது