வெள்ளை சர்க்கரையை நிறுத்தினால் எந்த தொல்லையிலிருந்து விடுபடலாம் தெரியுமா ?

 
white sugar-1

பொதுவாக நாம் தினம் காலையில் குடிக்கும் காபியில் ஆரம்பித்து ,பல உணவுகளில் சர்க்கரையை சேர்த்து கொள்கிறோம் .ஆனால் அந்த சர்க்கரையால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

sugar

1.பொதுவாக எல்லா மருத்துவர்களும்  அதிக சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

2.அதிலும் உங்கள் உணவில் இருந்து ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்

3.உணவில் இருந்து சர்க்கரையை குறைப்பது உடலில்  சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தும்.

4.மேலும் செரிமானத்தை எளிதாகவும் வேகமாகவும் செய்ய, ஒரு வாரத்திற்கு சர்க்கரையை நிறுத்தி விட்டு, உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

5.சர்க்கரை உட்கொள்ளலை நிறுத்திய ஒரு வாரத்திற்குள் உள் வீக்கத்தைக் குறைக்கத் தொடங்கும்.

6.குளிர் பானங்கள், டீ அல்லது காபி போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை தூங்கும் போது உட்கொள்ளும் பழக்கத்தை தவிருங்கள்.

7.ஏனெனில்  இவற்றால் தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

8.உங்கள் உணவில் வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, குளிர் பானங்கள், சாக்லேட்கள், கேக்குகள், பிஸ்கட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ள உணவுகளையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.

9.சர்க்கரையை உட்கொள்வது உடனடியாக உடலில்  ஆற்றலை  கொடுக்கலாம்,

10.ஆனால் பின்னர் உங்கள் ஆற்றலை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும்.