செல்போனை பக்கத்தில் வச்சிக்கிட்டு தூங்கினா ,எந்த நோயிடம் சிக்குவீங்க தெரியுமா ?

 
cellphone tower

இன்றைய நாகரீக உலகில் செல்போனை பிரிந்து ஒரு நிமிடம் கூட தனியே இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்து விட்டனர் .அதுவும் ஒவ்வொரு வருடமும் லச்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து புது மாடல் செல்போன் வாங்குவோர் பலர் இருக்கின்றனர் .அதை முறையாக பயன்படுத்தினால் நம் உடலுக்கு எந்த பாதிப்புமில்லை .அதை எப்படி பயன்படுத்தினால் மனித உடலுக்கு கேடு விளையும் என்று பார்க்கலாம் 

செல்போனை ஆண்கள் பேண்ட் மற்றும் ஷர்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள் .மேலும் ப்ளூ டூத் பய்னபடுத்தி பேசலாம் .அது  மட்டுமல்லாமல் முடிந்த அளவு தள்ளியே இருங்கள் 

cellpon

செல்போனிலிருந்து வீசும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மனிதனின் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது .மேலும் பலர் படுக்கைக்கு அருகில் வைத்து கொண்டு தூங்குவதால் பலமடங்கு இதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் .அதனால் அதை தூரத்தில் தள்ளி வைத்து விட்டு தூங்கவும் . போனை தலையணைக்கு அருகில் வைத்து கொண்டு தூங்குவதால் அதிலிருந்து வரும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தி ,உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வராமல் செய்கிறது  

செல்போனின் வெளிச்சம்  நம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்படைய செய்கிறது.அதுவும் இரவு நேரத்தில் இருளில் அதை பார்ப்பதால் பாதிப்பக்கு பல் மடங்கு வாய்ப்பிருக்கிறது