பரோட்டா உடலின் எந்தெந்த பாகங்களை பாதிக்கும்னு தெரிஞ்சா அதன் பக்கமே போக மாட்டிங்க

 
parotta

பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது.மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா. மைதாவைப் பட்டுப்போல மென்மையாக்க பயன்படும் `அல்லோக்ஸான்’ (Alloxan) எனும் வேதிப்பொருள், நேரடியாக கணையத்தைத் (Pancreas) தாக்கி, சர்க்கரைநோயை உண்டாக்கலாம் என்பது அண்மைக் காலமாக பொதுவெளியில் உள்ள கருத்து. சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்கப் பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா... கவனம்! #Parotta

1. இரத்த சர்க்கரையின் அளவினை அதிகப்படுத்தும்

மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது.

2. உடல் பருமன்

மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும். எனவே மைதா உணவுகளை தவிர்த்து வாருங்கள் நண்பர்களே.

3. மலசிக்கல் பிரச்சினை ஏற்படுத்தும்

மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும் நண்பர்களே. எனவே அடிக்கடி மைதா உணவுகளை உண்டு வருவதை தவிர்க்கவும் நண்பர்களே.

4. செரிமான கோளாறு

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன. எனவே மைதா உணவினை தவிர்த்து கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து வாருங்கள் நண்பர்களே.

5. இருதய கோளாறு

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும் நண்பர்களே. எனவே அதிக அளவு மைதாவினை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்துடுங்கள் நண்பர்களே..