நூடுல்சுக்குள் குடியிருக்கும் நூறு வகையான பிரச்சினைகள்

 
stomach

சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது.

நூடுல்ஸ் என்பது பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

 
இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

Hakka noodles recipe (Indo-Chinese Style) - Swasthi's Recipes

அனுமதிக்கப்பட்ட அளவை விட லெட்டின் அளவு அதிகமாக இருந்தால் அது மெல்ல கொல்லும் விஷமாக மாறக்கூடும். இதன் காரணமாக வயிற்று வலி, அதிக கோபம், தூக்கமின்மை, தலைவலி, மறதி நோய், ரத்த அழுத்தம், கிட்னி கோளாறு, சகிப்பு தன்மை இன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
நூடுல்ஸ், பீட்ஸா, பிரைட் ரைஸ், அசைவ உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும்.

நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் மலக்குடல் புற்று நோய் வர வழிவகுக்கும்.

நூடுல்ஸில் உள்ள மைதா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது.

இயற்கை முறையில் செய்யப்பட்ட வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி நூடுல்ஸ்களை சாப்பிடலாம். இவற்றில் உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம் போன்றவை உள்ளன.