முள்ளங்கியுடன் பால் உட்கொண்டால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

பொதுவாக பால் அதிகமாக குடிப்பதாலும் ,சில தவறான நேரத்தில் பால் குடிப்பதாலும் உடலுக்கு பல தீமைகள் உண்டாகிறது .சிலருக்கு பால் மூலம் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பாலில் லாக்டோஸ் என்ற பொருள் இருப்பதால் சிலருக்கு இது அலர்ஜியை உண்டாக்கும் .இதனால் சுவாச கோளாறு ,முதல் வயிற்று பொருமல் வரை உண்டாகும் .
2.இன்னும் சிலருக்கு வாய்வு பிரச்சினை ,குமட்டல் ,ஸ்கின் அலர்ஜி போன்ற தொல்லைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது .மேலும் மாட்டு பாலில் சில பெண்களுக்கு மார்பக புற்று நோய் உண்டாக்கும் பொருள் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
3.கருப்பு உளுந்து சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்
4.தயிர் சாப்பிட்ட பிறகு பால் குடிபோருக்கு அசிடிட்டி, கேஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்
5.நீங்கள் ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை, லிச்சி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது உடலில் நச்சு பாதிப்பை ஏற்படுத்தும்.
6.மீன் சாப்பிட்டு பால் குடிப்பவர்களுக்கு விரைவில் வயிற்றுப் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், புளிப்புப் புளிப்புகள், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.
7.நீங்கள் முள்ளங்கியுடன் பால் உட்கொண்டால், வயிற்றில் நச்சு உருவாகத் தொடங்குகிறது.இதனால் நம் உடலில் பல விதமான நோய்கள் உருவாக காரணமாகிறது
.