மது அருந்தும்போது இந்த தப்பையெல்லாம் செய்யாதீங்க

 
liquor

பொதுவாக இன்று  பலர் இப்படி மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர் .இந்த மது குடிப்பதால் சிலருக்கு பல உடல் உபாதைகள் உண்டாகிறது .அதில் முக்கியமானது மறுநாள் ஹேங் ஓவர் .இதை எவ்வாறு தவிர்க்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த ஹேங் ஓவரால் பலர் மயக்கம் ,தலை வலி என்று பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர் .இந்த தொல்லையை தவிர்க்க சில குறிப்புகளை கொடுக்கிறோம்  

liquor
2.மது குடிப்பதால் வரும் ஹேங்-ஓவரைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீர் அருந்தவும்.
3.ஏனென்றால், ஆல்கஹால் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.இதன் மூலம் நச்சுக்கள் வெளியேறும்
4.ஹேங்ஓவரில் வயிற்றுப்போக்கு, வியர்த்தல் அல்லது வாந்தி இருந்தால், உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கலாம். அதனால் தண்ணீர் குடிப்பது நல்லது  
5.மேலும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
6.மது அருந்தியது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம், பலர் மது அருந்தும்போது அதிகம் சாப்பிடுவதில்லை என்பதால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும். எனவே ஜூஸ் குடிப்பது உடல்நிலையை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
7.சில வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதும் ஹேங் ஓவரிலிருந்து தப்பிக்க வைக்கும்