லிப்ஸ்டிக் போடுவதால் எந்த பாதிப்பு ஏற்படும் தெரியுமா ?

 
lips

முன்பெல்லாம் லிப்ஸ்டிக்கை ஊரில் கூத்து கட்டுபவர்கள் ,நாடக நடிகர்கள் மற்றும் கரகாட்டம் ஆடுபவர்கள் மட்டும்தான் உபயோகித்து வந்தனர் ,ஆனால் இன்று அனைத்து பெண்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பித்து விட்டனர் .பல பெண்களும் தங்களை அழகாக காமிக்க லிப்ஸ்டிக் போட ஆரம்பித்து விட்டனர் ,லிப்ஸ்டிக் போட்டால்தான் தாங்கள் அழகாக இருப்பதாக நினைக்க ஆரம்பித்து விட்டனர் .இந்த லிப்ஸ்டிக்கால் உண்டாகும் பக்க விளைவு பற்றி பார்க்கலாம்

lipstick

1.சில பெண்கள் கொஞ்சமாக லிப்ஸ்டிக் போடுவர் .கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டாலும் கடுமையான உடல் நலக் கோளாறுகள் மற்றும் மனநல கோளாறுகள் ஏற்படும்.

2.சில பெண்கள் குறைந்தஅளவு உதட்டுச் சாயம் உபயோகிப்பதாக கூறுவர் ,ஆனால்  அதில் உள்ள காரீயம் நமது புத்திக் கூர்மையும், நடத்தை யையும், கற்றல் திறனையும் பாதிக்கிறது .

3.சில பெண்களுக்கு லிப்ஸ்டிக் போட்டதால் ,அது இல்லாமல் உதடு பொலிவிழந்திருக்கும் .லிப்ஸ்டிக்கை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாகவே உதட்டில் இருக்கும் பொலிவை இழந்து வறட்சி வெடிப்புகள் ஏற்படும்.

4.சில குடும்ப பெண்கள் கூட லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

5.சில நவீன மாடர்ன் பெண்கள் லிப்ஸ்டிக்கை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

6.லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது அவற்றில் சேர்க்கப்படும்  நச்சுப் பொருட்கள், நிறமிகளால் ஒவ்வாமை , அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் .