அடிக்கடி ஹோட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுறவங்க ,மருந்து ஆர்டர் பண்ணாமலிருக்க சில குறிப்புகள்

 
Fast Food

வீட்டுச்சாப்பாடு ஆரோக்கியமானது. ஹோட்டல் சாப்பாடு ருசியானது. ஆரோக்கியமா, ருசியா என்றால் பலருக்கும் முதல் சாய்ஸ் ருசி என்றே இருக்கிறது. வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒருநாள் வீட்டில் சமைத்தாலே பெரிது என்கிற நிலை! இப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் பெருநகரங்களில் மட்டுமல்லசிற்றூர்களிலும் சகஜமாகிவிட்டது. வெளியில் சாப்பிடுவது தவறில்லைஆனால் அங்கே கவனிக்கவேண்டிய சில ஹெல்த்தி விஷயங்கள் உள்ளன. அவை

* உணவை ஆர்டர் செய்யும்போதும் சாப்பிட்ட பின்னரும் தண்ணீர் பருகவும். அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பானதாக இருப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் உணவு எளிதாக செரிமானமாக உதவும்.

* கை கழுவும் இடத்தில் லிக்விடு சோப் (Hand wash) வைத்திருக்கிறார்களா, அது பயன்படுத்தத்தக்கது தானா, கைகழுவும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துப் பயன்படுத்த வேண்டும். கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது சிறந்தது.

* டிஷ்யூக்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், ரோல் வடிவில் உள்ள டிஷ்யூக்கள் அல்லது தனித்தனியாக இருப்பவற்றைப் பயன்படுத்துவது நல்லது. மற்றவரின் கைப்பட்டு நமக்கு வரும் டவல்களில் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* உணவு பரிமாறும் தட்டுகள், கப்புகள், ஸ்பூன்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துவிட்டுப் பயன்படுத்தவும்.

* ஹோட்டலில் நாம் சாப்பிடத் தேர்ந்தெடுக்கும் உணவு, அதிக எண்ணெயில் தயாரிக்கப்படாததாக இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. உதாரணமாக, கிரில்டு (Grilled) அல்லது ஸ்டீம்டு (Steamed) வகைகளில் தயாரித்த உணவுகளைத் தேர்வு செய்யலாம்.

* அசைவ உணவுகளில் குறைந்த அளவு கொழுப்பு உள்ள இறைச்சி (Lean Meat) அல்லது சிக்கனின் நெஞ்சுப்பகுதி ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். செரிமானத்தையும் எளிதாக்கும்.

சாப்பிடும் உணவு 500 கலோரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே, சாலட் மற்றும் சூப் வகைகளை முதலில் உட்கொள்வது சிறந்தது.

* ஹோட்டலில் தயாரிக்கும் உணவில் சுவையைக் கூட்ட வெண்ணெய், எண்ணெய், வினிகர், உப்பு போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துச் சமைப்பார்கள். எனவே, ஆர்டர் செய்வதற்கு முன்னால், உணவில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன (Main Ingredients) எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு நமக்கு ஏற்றதை ஆர்டர் செய்யலாம்.

* சாப்பிட்ட பிறகு, சிலருக்கு ஏதாவது பானங்களைக் குடித்தால்தான் திருப்தி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள், கார்பனேட்டட் பானங்களைத் தவிர்த்துவிட்டு ஃப்ரெஷ் ஜூஸ் பருகலாம்.

* கடைசியாகச் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்க்ரீம்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவும். அதிகக் கொழுப்பு இல்லாதவாறு, செயற்கை நிறமிகள் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பால் உணவைச் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் ஆடை நீக்கிய பால் (Skimmed Milk) அல்லது ஜூஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

# ஜூஸ்!

* மீன் உணவை விரும்புகிறவர்கள் எண்ணெயில் பொறித்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலும் ஹோட்டல்களில் உபயோகப்படுத்திய எண்ணெய்களை தான் மீண்டும், மீண்டும் வடிக்கட்டி பயன்படுத்துவர். இது உடல் நலத்திற்கு கேடானது.

எனவே, ஹோட்டலில் சாப்பிடும் போது கிரில் அல்லது தந்தூரி, வேக வைத்த உணவுகள் தேர்வு செய்து உண்பது கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும்.


சாப்பிட வைக்கப்படும் தட்டை நீங்களே கொஞ்சம் தண்ணீர் தெளித்து, டிஷு பேப்பர் வைத்து துடைத்த பிறகு சாப்பிட பயன்படுத்துங்கள். சில உணவகங்கள் மட்டுமே பீங்கான் தட்டுகளை சுடு தண்ணியில் இட்டு கழுவி, துடைத்து பயன்படுத்துவார்கள்.

பல உணவகங்கள் வெறும் நீரில் அலாசி தான் மீண்டும் பயன்படுத்துவார்கள். இதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


பெரும்பாலும் இப்போது பல கடைகளில் டிஷு பேப்பர்கள் உபயோகத்திற்கு வந்து விட்டன. ஆயினும், இன்னும் சில கடைகளில் கை கழுவும் இடத்தில் டவல்கள் தான் தொங்கவிட்டிருப்பார்கள், பலர் பயன்படுத்திய அந்த டவலில் இருந்து பாக்டீரியாக்கள் தான் அண்டுமே தவிர, கைகள் சுத்தம் ஆகாது. இதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த 'இந்த' உணவுகளை கண்டிப்பா தவிர்க்கணுமாம்...!உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த 'இந்த' உணவுகளை கண்டிப்பா தவிர்க்கணுமாம்...!

நாம் ஹோட்டல் செல்லும் போது உணவு ஆர்டர் செய்வதோடு நிறுத்திக் கொள்வோம், அவர்கள் எப்படி சமைக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

* தேர்ந்தெடுக்கும் உணவானது அரிசி அல்லது கோதுமை உணவாக இருக்க வேண்டும். மைதா உள்ளிட்ட ரீஃபைண்டு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர் போன்றவற்றைத் தவிர்க்கலாம்!