எப்போதும் வெந்நீரில் குளிப்போரை கண்ணீரில் தள்ளும் நோய்கள்

 
bath

பொதுவாக பச்சை தண்ணீரை விட வெந்நீரில் குளிப்பதால் அதிக தீமைகள் உண்டு .பலர் குளிர்காலம் முதல் வெயில் காலம் வரை எப்போதும் சூடு நீரில்தான் குளிப்பது வழக்கம் ,இதற்கு அவர்களின் உடல் சூடு நீருக்கு அடிமையாகி விட்டதன் விளைவு .ஆனால் சுடுநீரில் ஆண்கள் தொடர்ந்து குளித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது ,மேலும் கொதிக்கும் நீரை தலையில் கொட்டினால் அந்த சூட்டில் முடி உதிரும் அபாயமும் உள்ளது .பலருக்கு இப்படி நடந்துள்ளது ,எனவே சுடுநீரில் குளிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெயில் காலத்திலாவது பச்சை தண்ணீருக்கு மாறுங்கள் .முதலில் கஷ்டமாக இருந்தால் ஒரு சொம்பு தண்ணீரை முதலில் தலையில் கொட்டுங்கள் ,பின்னர் அது பழகி விடும் ,மேலும் உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் இருந்தால் அப்போது சூடு நீரில் குளிக்கலாம் .சரி வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி பார்க்கலாம்

bath

1.சிலர் எப்போதும் வெந்நீர் குளியல்தான் விரும்புவர் ,இப்படி குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தும் போது, அது கண்களில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும்.

2.இந்த வெண்ணீர் குளியல்  கண்களில் அரிப்பு பிரச்சனைகளை உண்டாக்கி ஆபத்தை விளைவிக்கும் .

3.எல்லோரும் இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தை விரும்புகிறார்கள், ஆனால் தொடர் சுடுநீர் குளியல் உங்கள் சருமத்தில் சுருக்கத்தை வெகு விரைவில் கொடுக்கும்

4.மேலும் உங்கள் சருமம் மிக சீக்கிரம் கடினமாகவும் மாற்றும் என்பதை நினைவில் கொண்டு இன்றே பச்சை தண்ணீர் குளியலுக்கு மாறுங்கள்