இதை படிச்சா இனி காலையில் காபி டீ குடிக்க மாட்டிங்க

 
coffee

பொதுவாக நம்மில் பெரும்பாலோருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபி வேண்டும். ஆனால் இப்படி வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது ஆரோக்கியமில்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.ஆயுர்வேத சிகிச்சையின் படி  வெறும் வயிற்றில்  ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது சிறந்தது .

water

2.இப்படி குடிப்பதால்  நம் குடல் சுத்தமடைந்து, உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுகிறது.

3..சாதாரண தண்ணீர் குடிப்பது சிறந்ததா?அல்லது வெதுவெதுப்பான நீர் குடிப்பது சிறந்ததா ?.

4., வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதுதான் சிறந்தது.என்று டாக்டர்கள் கூறுகின்றனர்

5.இப்போது பெரும்பாலானோர் காலையில், கோதுமைப் பருப்புச் சாறு, முருங்கைச் சாறு, வெதுவெதுப்பான எலுமிச்சை டீ, போன்றவற்றை குடிக்கிறார்கள்.

6.இந்த ஆயுர்வேத சாறுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை தான் என்றாலும், எல்லாருக்கும் பொருந்தாது.

7.ஆனால் இந்த சாறுகளை விட வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.

8.நாளின் தொடக்கமாக, வெதுவெதுப்பான நீர் குடித்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல எடை குறையும்

9.வெதுவெதுப்பான நீர், வளர்சிதை மாற்றத்திற்கு நிலைத்தன்மையைக் கொண்டு வந்து, பித்தத்தை சமநிலைப்படுத்தி செரிமானத்தை கொடுக்கிறது

10.எனவே, பித்தத்தை கட்டுப்படுத்த, காலைபானமாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம்