பிஸ்கட்டுக்குள் இவ்ளோ ஆபத்து இருக்கா ?இது தெரியாம போச்சே ..

 
biscuits

பொதுவாக பிஸ்கட்டுகள் நாம் பசியெடுத்தால் உண்பது .இதை அதிகம் குஹந்தைக்கு கொடுத்தால் என்ன பாதிப்பு வருமென்று இப்பதிவில் நாம் காணலாம்  

1.சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது.
2.இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை பெரியவர்களுக்கும் ,எதிர்காலத்தில் குழந்தைகளுக்கும் உண்டாக்கும் .

biscuit
3.மேலும் மலிவாக மார்க்கெட்டில் கிடைக்கும் சால்ட் பிஸ்கட்டில் சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது.
4.உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக்  கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு ஆரோக்கியம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது .
5.மேலும்  கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை  அதிகரித்து அதனால் பல நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது .
6.மேலும் ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது.
7.பெரும்பாலானவர்கள்,  அதனால் குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள்.
8.இது முற்றிலும் தவறான பழக்கம்.அதிலும்  க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும்.இது மற்ற சாதாரண பிஸ்கட்டை விட அபாயகரமானது