என்னது! வாழைப்பழத்துக்குள் இவ்ளோ பக்க விளைவு பதுங்கியிருக்கா ?
பொதுவாக பழங்களில் சிறந்த பழங்களாக மா ,பலா ,வாழை என்று கூறுவதுண்டு .இந்த முக்கனிகளில் மூன்றாவது கனியாக நாம் கூறுவது வாழைப்பழத்தைத்தான் .இந்த பழத்தில் கால்சியம் ,பொட்டாசியம் என்று பல நன்மைகள் இருந்தாலும் ,பல பக்க விளைவுகள் இருக்கின்றன .இந்த பழத்தின் பக்க விளைவுகள் பத்தி தெரிஞ்சா அதிர்ச்சியாவிங்க .இந்த வாழைப்பழத்தின் சில பக்க விளைவுகள் பத்தி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

1.வாழைப்பழத்தில் கற்பூர வள்ளி ,பூவம் பழம் ,செவ்வாழை ,ஏலக்கி என்று பல்வகை உண்டு ,இந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
2.ஆனால் இந்த நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகள் உள்ளன.
3.வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்து மற்றும் நிறைய சர்க்கரை நிரம்பி காணப்படுகிறது
4.இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவோருக்கு உடல் எடை கூடும் வாய்ப்புகள் உண்டு.
5.சிலர் வெறும் வயிற்றில் வாழைப்பழம் எடுத்துக்கொள்வர் .இப்படி சாப்பிடுவதால் வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது.
6.மேலும் பல் பிரச்சினையுள்ளோர் வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுவது அது பல் சொத்தையை உண்டாக்கி ஆரோக்கியத்தை கெடுக்கும் .
7.வாழைப்பழத்தில் உள்ள டைரோசின் என்ற பொருள் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கி நமக்கு தொல்லை கொடுக்கும் .


