காலை உணவை தவிர்ப்போர் எதிர்காலத்தில் எந்த நோயால் தவிக்கணும் தெரியுமா ?

 
idli

பொதுவாக அல்சர் என்ற குடல் புண் வந்து விட்டால் தினம் அவஸ்த்தைத்தான் பட வேண்டும் .இந்த அல்சர் குணமாக பல இயற்கை வைத்தியம் உள்ளது .உதாரணமாக

வெள்ளை குங்கிலியம் 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை தூய பசு வெண்ணெய்யில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் பாலை குடித்து வர அல்சர் குணமாகும்.இது போல மேலும் சில இயற்கை வழிகளை காணலாம்

1.தலைவலி, ஜுரம் போல வெகு சாதாரணமாக அல்சர்  நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே.

ulcer health tips

2.பாக்கெட் உணவுகள், ரசாயனம் கலந்துள்ள உணவுகள் என மேற்கத்திய உணவு பழக்கங்களை கடைபிடிப்பதாலேயே இது போன்ற நோய்கள் வருகின்றன.

3.தொண்டை, உணவுக்குழாய், சிறுகுடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் புண்களை அல்சர் என்கிறோம்.

4.இந்த நோய்க்கு முக்கிய காரணம்  சரியான நேரத்திற்கு உணவை உண்ணாததும் , காலை வேலை உணவை தொடர்ந்து தவிர்த்து வருவதும்தான் காரணம் .

5.மேலும் அல்சர் உருவாக  காரம் அதிகம் உள்ள உணவுகள், மாசாலா அதிகம் உள்ள உணவுகள், புளிப்பான உணவுகள் போன்றவற்றை அதிகம் உண்பதாலும்  ஏற்பட வாய்ப்புள்ளது.

6.மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வர அல்சர் குணமடையும்.

7.மேலும் அல்சர் குணமாக நேரத்திற்கு தூங்க வேண்டும்.

8.அல்சர் குணமாக இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர  குணமடையும்.

9.அல்சர் குணமடையும் வரை காரம், புளிப்பு, அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 10.அதோடு அல்சர் குணமாக தினமும் குறைந்தது 3 லிட்டர்  தண்ணீர் குடிக்க வேண்டும்.