ரஸ்க் சாப்பிடுவது ரொம்ப ரிஸ்க்! எதனால் தெரியுமா ?
பொதுவாக பலர் பசியெடுத்தால் ரஸ்க் சாப்பிடுவது வழக்கம் .ஆனால் இந்த ரஸ்க் சாப்பிடுவது சிலருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்துமாம்
ரஸ்க் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகளை குறித்து தெளிவாக பார்க்கலாம்.
1.பெரும்பாலானோர் டீ மற்றும் காபியில் ரஸ்கை தொட்டு சாப்பிடுவது வழக்கம்.
2.ஆனால் இது நம் உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?.
3.ரஸ்க் நாம் தினமும் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து செரிமானமின்மையை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி விடுகிறது.
4.மேலும் இது உடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து விடுகிறது.
5.ரஸ்கில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் எதுவுமே கிடையாது. 6.இதில் முழுக்க முழுக்க சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
7.இது எந்த விதத்திலும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கப் போவதில்லை.
8.எனவே உணவில் ஆரோக்கியத்தை சாப்பிடுவதே நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது