மீன் சாப்பிட்டதும் பால் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

பொதுவாக பால் உடலுக்கு நல்லதுதான் .ஆனால் சிலருக்கு பால் அலர்ஜியாகும் .இந்த பாலை எந்த உணவுடன் சேர்த்து குடித்தால் எந்த பாதிப்பு உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிட்ரஸ் பழங்களை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது.
2.சிட்ரஸ் பழங்களை உட்கொண்டதும் பாலை குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் போகும்.
3.இப்படி குடிப்பது இது செரிமானத்தை பாதித்து, அஜீரண கோளாறை உண்டாக்கும்.
4.அது மட்டுமல்லாமல் உளுத்தம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5.இப்படி பால் குடித்தால் இவை செரிமான செயல்முறையை பாழாக்கும்.
6.குறிப்பாக இப்படி குடிப்பதன் மூலம் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.
7.மேலும் வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் உணவுகளை உட்கொண்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
8.இப்படி பால் குடித்தால் முகத்தில் மற்றும் சருமத்தில் கரும்புள்ளிகளை உண்டாக்கும்.
9.மேலும் முள்ளங்கி சாம்பார் மற்றும் பெர்ரி பழங்களை சாப்பிட்டிருந்தால், உடனே பால் குடித்துவிடாதீர்கள்.
10.ஏனெனில் இந்த இரண்டையும் உட்கொண்டதும் பால் குடித்தால் சரும அரிப்புகள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
11.மீன் சாப்பிட்டதும் பால் குடிக்கக்கூடாது.
12.இவ்வாறு குடிக்கும் போது, அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீரழித்து, ஃபுட் பாய்சன், ஏற்படுத்தும்