ஓவரா முட்டை சாப்பிடுறவங்களை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்

 
eggs

நாம் அனைவரும் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது நும்முடைய உடலுக்கு சில தீமைகளும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டை முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். 


உருளைக்கிழங்கு மற்றும் முட்டை உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.

ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

இருப்பினும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

 முட்டையில் கொழுப்பு உள்ளது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, ​​​​உங்கள் உடலால் உட்கொள்ளும் கலோரிகளை சமநிலைப்படுத்த முடியாது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன