ப்ரஷ் கொண்டு பல் விளக்குவோரின் பல்லுக்கு காத்திருக்கும் ஆபத்து

 
tooth brush

பல்வலியும் ,தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழியுண்டு .அந்தளவுக்கு பல்வலி நம்மை பாடாய் படுத்தியெடுக்கும் .இந்த பல்வலிக்கு காரணம் பல்லில் உண்டாகும் சொத்தை பற்கள்தான் .இதற்கு நாம் பல் டாக்டரிடம் சென்றால் உடனே அந்த சொத்தை பல்லை பிடுங்கி விடலாம் என்று கூறுவார் .ஆனால் இப்படி பற்களை பிடுங்கி கொண்டே போனால் நமது முக அமைப்பு மாறி விடும் .எனவே சித்த மருத்துவத்தில் இதற்கு நம் வீட்டிலிருக்கும் புதினா ,கிராம்பு ,பூண்டு மற்றும் உப்பை கொண்டே தீர்வுகள் உண்டு .சொத்தை பல்லுக்கு சிறந்த தீர்வு உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து தினம் மூன்று வேலை வாய் கொப்பளித்து வர வேண்டும் .மேலும் சில பல்லை பாதுக்காக்க டிப்ஸ்

tooth

1.பற்கள் கெட்டியாக இருக்க வேண்டுமானால்  ஈறுகளை காலையில் இரண்டு மூன்று நிமிடங்கள் விரலால் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் 80 வயதானாலும் பற்கள் விழாது.நம் பற்கள் பாதுகாப்பாக இருக்கும் 

2.மேலும் பல்லில் சொத்தை விழாமலும் ,பல் சிதைந்து போகாமலும் இருக்க பிரஷ் உபயோகிப்பதை அறவே தவிக்க வேண்டும். சிலர் யாரிடமாவது பேசிக்கொண்டே பிரஷ் கொண்டு கரகரவென்று அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஈறுகள் சீக்கிரம் பழுதடைந்து பற்கள் ஆடிப்போய் நாளடைவில் விழுந்து விடும் வாய்ப்புள்ளது .

3.பிரஷ் உபயோகிப்பதால் பற்கள் விரைவில் கெட்டுப் போகின்றன என்று 1967-ம் ஆண்டே  ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டாக்டர்கள் மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்தார்கள். பற்கள் சொத்தை ஆவதற்கு நாம் ஈறுகளை தேய்க்காத குற்றம்தான் என்று அந்த மாநாட்டில் கூறி அதற்கான வழி முறைகளையும் கூறினார்கள்