பூண்டுக்குள் பதுங்கியிருக்கும் பக்க விளைவுகள் -யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா ?
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இருப்பினும் இதனை சிலர் எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். அதே நேரத்தில், பூண்டு அதிகமாக உட்கொள்வது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அதிக பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் சில உள்ளன. வாய் துர்நாற்றம் போன்ற சில பக்க விளைவுகளும் பூண்டுக்கு உள்ளன.
பூண்டு ஒவ்வாமை எதிர் செயல் பாட்டையும் சிலருக்கு ஏற்படுத்துகிறது.
இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டு அதிக அளவு சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தற்போது பூண்டை யாரொல்லாம் சாப்பிடகூடாது என்பதை பார்ப்போம்.
கல்லீரல், குடல், வயிறு பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. இதனால், குடலில் காயம் ஏற்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. உங்கள் கல்லீரலில் பூண்டில் உள்ள சில கூறுகள் வினைபுரியும். கல்லிரல் குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளுடன், இது சேர்ந்து கொண்டால் இது பிரச்சனையை அதிகரிக்கிறது.
பூண்டு இரத்தத்தை மெலிதாகச் செய்கிறது. எனவே சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவர்களின் காயம் ஆறாமல் இருக்கும். இரத்தம் மெலிவதால், காயத்திலிருந்து இரத்தம் வர வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகள் பூண்டை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அதை அதிகமாக சாப்பிடுவது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் மிகவும் குறைத்து விடும். இது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனினும் அளவோடு உட்கொண்டால், அது சர்க்கரையை கட்டுப்படுத்து நன்மை பயக்கும்.


