சீரகத்துடன் சோம்பு சேர்த்து குடிச்சா வயிற்றில் நடக்கும் மேஜிக்

 
sombu

சீரகம் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிந்தாலே அதன் மகத்துவம் நமக்கு புரியும் .சீர் -அகம் .என்றால் நம் அகத்தை அதாவது உள் உறுப்புகளை சீர் படுத்தும் பொருள்  இது என்பதாலே சீரகம் என பெயர் வந்தது .இது அனைத்து வயிறு பிரச்சினைகளையும் சரி செய்கிறது .மேலும் சிறுகுடலில் வாயு புகுந்து கொண்டு வயிறு உப்பிசம் முதல் செரிமானமில்லாமல் வரும் வயிறு வலி வரை சரி செய்கிறது .இதனுடன் சோம்பு சேர்த்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் எடை இழப்புக்கு பெரிய துணை புரிகிறது .இந்த சீரக தண்ணீரை காலையில் மற்றும் மதியம் உணவு உட்கொள்ளுவதற்கு முன்பு குடித்து வந்தால் சிறந்த பலனை பெறலாம் 

seeragam

சீரகம் மற்றும் சோம்பு கலந்த பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எடை இழப்புக்கு சீரகம் மற்றும் சோம்பு கலந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  நீங்கள் ஏதேனும் உடல் பயிற்சிகள்  கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகிறது  இது நம் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

அதோடு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் மற்றும் சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வந்தால், உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். இது உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் சிறப்பாக ஆக்குகிறது.அதன் மூலம் சீக்கிரமே எடை குறைவுக்கு வழி செய்கிறது .மேலும் சீரக பொடியை கூட உணவின் மீது தூவி சாப்பிடலாம் .

சீரகம் மற்றும் சோம்பு கலந்த நீர் குடிப்பதால் செரிமானமும் நன்றாக இருக்கும். இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து பெறுகிறது. இது உடலில் ஆற்றலை தக்க வைக்கிறது.மேலும் சீரக பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து குடித்து வந்தாலும் எடை குறைய வாய்ப்புள்ளது