சுகரை சுத்தமாக குறைக்க உதவும் இந்த விதையின் மகத்துவம் தெரியுமா ?

 
koththamalli seeds

கொத்தமல்லி இலையை போன்றே அதன் விதைகளும் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .நாம் சமையலில் சேர்க்கும் சீரகம் ,மிளகு ,சோம்பு போன்றே இந்த மல்லி விதைகளும் நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது ,இதன் விதைகளை நீரில் ஊறவைத்து மறுநாள் குடித்தால் நீரிழிவு நோய் ,ரத்த அழுத்த நோய் ,மாதவிடாய் கோளாறுகள் ,மற்றும் வாத நோய் ,பெண்களுக்கு வெள்ளை படுதல்  போன்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடுகிறது

கொத்தமல்லி விதையில் இவ்வளவு ...

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு  இரத்த குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் .இதன் அளவைக் குறைப்பதில் கொத்தமல்லி விதைகள் பெரும்பங்கு வகிக்கிறது .. இது இன்சுலின் செயல்பாட்டை பராமரிக்க உதவி புரிவதால், இரத்த சர்க்கரை அளவை குறைத்து சுகர் பேஷன்டின் ஆரோக்கியம் காக்கிறது

 ஒரு ஆய்வு முடிவுகளின்படி, ஸ்ட்ரெப்டோசோடோசின் தூண்டப்பட்ட நீரிழிவு, எலிகளில் கணைய பீட்டா செல்களில் இருந்து இன்சுலின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி அடக்குவதில் கொத்தமல்லி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன எனக் கண்டுபிடிக்கப்பட்டு அதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு தெரிய படுத்தி வருகின்றனர்