நீங்கள் நீண்ட ஆயுள் வாழ உதவும் ரகசியம் என்ன தெரியுமா ?

 
doctors doctors


பொதுவாக உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதைத்தான் விரும்புவர் ,அந்த நீண்ட ஆயுளுக்கு மனிதர்கள் பல மருத்துவர்களை நாடி ஓடுவர் ஆனால் ஜப்பானில் உள்ள ஒரு தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுள் ரகசியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக ஜப்பான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர் .ஜப்பான்    மற்றும் தைவான் நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவிலும் இப்படித்தான் .
2.இந்த ஒகினாவா தீவில் அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழ்கிறார்கள். 
3. இந்த தீவில் தான் வேறு எங்கும் இருப்பதை விட 100 வயதை தாண்டிய மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். மேலும் ஆரோக்கியமாக நோயின்றி வாழ்கின்றனர் 
4.இந்த ஆரோக்கியம் மிகுந்த ஒகினாவா தீவில், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகள் மற்றும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது .
5.அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரணம் ஒகினாவா மக்கள் எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கிறார்கள். 
6.இதுதான்  அவர்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதன் நல்வாழ்வு ரகசியம் ஆகும்.
7.அதேபோல் இந்த தீவின் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டே ஓரிடத்தில் ஓய்வின்றி இருப்பார்களாம், 
8.இப்படி அசைந்து கொண்டே இருப்பதுதான்  அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் காரணமாம்.
9.ஒகினாவா தீவு மக்கள் கடற்பாசி, பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை உண்டு வருகின்றனர்  
10.மேற்கூறியவைதான் ஒகினாவா மக்களின் நீண்ட ஆயுள் ரகசியம் என்று பல ஆய்வுகள் கூறுகிறது