இந்த ஜூசுக்குள் இவ்ளோ நன்மை இருக்குனு தெரிஞ்சா, எந்த 'சிரப்'புக்கும் காசு செலவு செய்ய மாட்டிங்க
நாம் எடுத்து கொள்ளும் உணவு முறையில் நமக்கே தெரியாமல் பல நன்மைகள் உள்ளது. அந்த வகையில் சாத்துக்குடியில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் அது தெரியமலையே நாம் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருகிறோம்.
ஜூஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானது சாத்துக்குடி ஜூஸ் எனலாம். ஏனெனில் இது எந்த பிரச்சனை இருந்தாலும் குடிக்க ஏற்ற ஓர் அற்புதமான ஜூஸ். 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் குடிக்க ஏற்றதும் கூட. சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் தனித்துவமான சுவை அனைவருக்குமே பிடிக்கும் வகையில் இருக்கும்.
இப்படிப்பட்ட சாத்துக்குடி விலைக் குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இந்த சாத்துக்குடியை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால் உடலைத் தாக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
ஏனெனில் சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன. சாத்துக்குடியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவெனில், இதில் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் மட்டுமின்றி, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் தோலை உலர வைத்து பொடி செய்து, குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.
பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஜூஸ் எதையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ஒருவர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.

பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் ஆக எடுத்து கொள்வது சிறந்தது. இது நீர்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இது அனைத்து பருவ நிலைகளிலும் எடுத்து கொள்ள முடியும். சரிவாங்க சாத்துக்குடியை ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியங்கள் குறித்து பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் முதல் மாதத்தில் வரும் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகள் வரும். அந்த நேரத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது குமட்டல், மற்றும் வாந்தி வருவதை குறைக்கும். வாரத்திற்கு 3 முறை இந்த சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. இதனால் சளி , இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.
இந்த ஜூஸ் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றது. இது உமிழ் நீரை சுரப்பிகளை தூண்டுவதால் வயிற்றில் பசியை உண்டாக்கும். செரிமான பிரச்சனை, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
நீண்ட நாட்களாக இருக்கும் வயிறு புண்கள் மற்றும் வாய் புண்கள் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சமநிலை படுத்துகிறது. அதனால் வயிறு புண்கள் சரி ஆகும்.
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் வயதில் பெரியவர்கள் இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.


