சைனஸ் பிரச்சினையால் எந்த வேலையும் ஓடலியா ?அதை ஒரு வழி பண்ணலாம் வாங்க

 
cold

 

 

அடிக்கடி தும்மல் ,மூக்கடைப்பு ,மூக்கு ஒழுகுதல் ,தலை வலி ,காய்ச்சல் ,இருமல் போன்றவை சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள் .இதை  சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.மேலும் சுற்று சூழல் ,பொல்லுஷன் மற்றும் அலர்ஜி போன்றவை இதற்கு காரணம் .

cold

இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

 

சைனஸ் பிரச்சினையை சரி செய்ய ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இந்த வியாதிக்கு நல்ல பலனை காணலாம் .

 சைனஸ் பிரச்சினையை சரி செய்ய ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசித்து வந்தால் இதற்கு நிவாரணம் உடனடியாக கிடைக்கும்

சைனஸ் பிரச்சினையை சரி செய்ய சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள மஞ்சள் நிற ,கெட்ட வாடை வீசும் சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளித்து சுகமாக சுவாசிக்க வைக்கிறது .

சைனஸ் பிரச்சினையை சரி செய்ய,சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசித்து வருவோருக்கு கை மேல் பலனுண்டு என்று அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர்

சைனஸ் பிரச்சினையை சரி செய்ய  சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் சைனஸை சட்டுன்னு விரட்டலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .