தைராய்டு பிரச்சனையுள்ளவர்கள் இந்த பூவை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்
பொதுவாக தைராய்டு சுரப்பியின் வேலை நமது இதய துடிப்பு ,உடல் வெப்ப நிலை ,மன நிலை போன்றவற்றை சம அளவில் வைப்பதுதான் .இதன் பாதிப்புகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இந்த சுரப்பி சரியாக செயல்படவில்லையெனில் அது ஹைப்போ தைராடிசம் ,ஹைப்பர் தைராய்டிசம் என்று நோயை உருவாக்கி விடுகிறது .
2.அதனால் நாம் இந்த தைராய்டு சுரப்பி செயல்பட சில உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் .
3.இல்லையெனில் மலசிக்கல் ,முடி உதிர்வு ,மன சோர்வு ,மலட்டு தன்மை ,பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் போன்ற தொல்லைகள் உண்டாகும் .
4.குங்குமப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளல் இந்த நோயாளிகளுக்கு உதவும் ,
5.மேலும் வாழைப்பழம் ,பூசணி விதைகள் ,கொள்ளு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்
6.தைராய்டு என்பது தொண்டையில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும்.
7.தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கும், சமநிலையில் இயங்குவதற்கும் காப்பர் சத்து மிகவும் முக்கியமானது.
8.பலாப்பழத்தில் காப்பர் சத்து இருப்பதால் தைராய்டு இருப்பவர்கள், இதனை சாப்பிடுவது நல்லது.