குதிரை வாலி அரிசியில் குவிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

 
ration rice

பொதுவாக குதிரை வாலி அரிசி மானாவாரி பயிர் என்பதால் நச்சுத்தன்மை இருக்காது. அதே நேரத்தில் உமி நீக்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியாது. இது புற்கள் வகையைச் சேர்ந்த தாவரம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க நினைப்பவர்கள் குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். ஏனெனில் இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

sugar
2.குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
3.குதிரைவாலி அரிசி சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்க உதவுகிறது.
4.செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்துகிறது.
5.கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
6.இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
7.ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து அதிகளவு உள்ளது.
8.இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.