கை நடுக்கம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா ?

 
peralisis peralisis

பொதுவாக அறுபது வயதுக்கு மேற்பட்டவருக்கு  முதுமையால் ஏற்படும் கை நடுக்கம் உண்டாகலாம்  அப்படியிருந்தால், அதற்கு பெரிதாகப் பயப்பட தேவையில்லை. ஒருவேளை பிரச்சினையாக இருந்தால், மருந்து கொடுத்து சரிப்படுத்தலாம்.ஆனால் இளம் வயதில் உண்டாகும் கை நடுக்கம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம்.
2. பார்கின்சன் நோய் மிகத் தீவிரமான நடுக்கம் உண்டாக்கும் நோய் . 
3.பார்கின்சன் நோய் நடை, சிந்தனை போன்றவற்றையும் இது மெதுவாக்கிவிடும். 
4.இந்த பார்கின்சன் நோய்க்கு  நரம்பியல் நிபுணரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.
5.சிலருக்கு தைராய்டு பிரச்சினை இருக்கும் .இந்த சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.
6.சிலருக்கு இளம் வயதில் கை நடுக்கம் உண்டாகும் .இப்படி இளம் வயதில்  ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம். 
7.இளம் வயதில் கை நடுக்கத்துடன்  படபடப்பு, தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும். 
8.இந்த நடுக்கத்துக்கு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதைச் சரியாக்கலாம்.
9.இந்த கை நடுக்கத்துக்கு காப்பி, டீ போன்றவற்றை அதிகமாகக் குடிக்க கூடாது , 
10.அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம். 
11.சிலருக்கு எந்த காரணமும் இன்றிக் கை நடுக்கம் ஏற்படலாம். இதையும் மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்த முடியும்.