"கமல்ஹாசன், பாலகிருஷ்ணா, மோகன்லால் ஆகியோருக்கு நன்றி".-இயக்குனர் ராஜமவுலி
பஹத் பாசில் நடித்துள்ள ஃபேண்டஸி கதைகொண்ட ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ என்ற படத்தின் புரமோஷனில் பேசிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘படத்தின் முன்னோட்டத்துக்கு பின்னணி குரல் கொடுத்த கமல்ஹாசன், பாலகிருஷ்ணா, மோகன்லால் ஆகியோருக்கு நன்றி. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்று தொடர்ந்து வெற்றியை வழங்கிய சூர்யாவுக்கு வாழ்த்துகள்.
இரண்டரை மணி நேர படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். ஐந்து நிமிடங்களில் கதை சொல்ல முடியுமா என்று கேட்டேன். ‘ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை’ என்று இயக்குனர் சொன்னது எனக்கு பிடித்துவிட்டது. பஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர். வித்தியாசமான கேரக்டர்களை எப்படி தேர்வு செய்து நடிக்கிறார் என்று, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து அவர் டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார். படத்தின் முதல் பிரதியை டப்பிங் மற்றும் இசை இல்லாமல் பார்த்தபோது அழுதேன், சிரித்தேன். அந்தளவுக்கு இப்படம் என்னை கவர்ந்தது’ என்றார்.

