பாப்கானுக்குள் பதுங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம் இதுதான்

 
popcorn

நாம் சினிமா தியேட்டரில் இடைவேளையில் சாப்பிடும் பாப்கார்னில் ஏரளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன என்றால் நம்ப முடியவில்லை தானே .!ஆம் அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

popcorn

பாப்கார்ன் ஆரோக்கியமான சிற்றுண்டி .நமக்கு எடை குறைய இது சிறந்த ஒரு சிற்றுண்டி .உடல் எடை குறைய விரும்புவோருக்கு இதில் கலோரிகள் குறைவு என்பதால் இதை சாப்பிடலாம் .மேலும் இதில் நார் சத்தும் இருப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும்

பாப்கார்ன்களில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, பாப்கார்ன் ஒரு முழு தானியமாகும், இது எடையைக் குறைக்க ஒரு சிறந்த உதவியாகும். பாப்கார்னை மெல்லும்போது, உங்கள் தாடையும் நன்றாக இயங்குவதால் தாடை தசைகளுக்கு நல்ல பயிற்சியாகும்

.அடுத்து பாப்கார்ன் போலவே உடல் எடை குறைக்கும் ஒரு உணவுப்பொருள் ஓட்ஸ் ஆகும் .இதில் நார்சத்து உள்ளதால் கலோரிகள் குறைவாக உள்ளதாலும் எடை குறைக்க சிறந்த உணவாகும்

இதை உண்பது உடல் எடையை குறைப்பதற்கான பொதுவான வழி., நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் வைத்திருக்கும் இது ., ஓட்ஸில் உள்ள லீன் புரோட்டீன் உங்கள் எடையை குறைய உதவியாக இருக்கும்அதனால் பாப்கார்ன் மற்றும் ஓட்ஸ் சாப்பிட்டு உடல் எடையை குறைத்து கொள்ளுங்கள் .