தினம் கையளவு பிஸ்தா எப்படி சாப்பிட்டால் சர்க்கரை எந்தளவு குறையும்னு தெரியுமா?

 
sugar

சமுதாயத்தில் சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, `அவர் என்ன அவ்வளவு பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் இன்றளவும் உள்ளது. இந்த பிஸ்தாவை விட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது.


கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பிஸ்தா மரத்தை பயிரிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் 1903 முதல் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.

சீனர்கள் பிஸ்தா பருப்பை `மகிழ்ச்சியான பருப்பு’ என்று அழைக்கிறார்கள். பிஸ்தா பருப்பு அதன் கொட்டையை அதுவாய் திறந்து பல்தெரிய சிரிப்பதுபோல் காணப்படுவதால் இந்த பெயரை அவர்கள் சூட்டியுள்ளனர்

பிஸ்தா மருத்துவ நன்மைகள்

நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.

ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

இதிலுள்ள வைட்டமின் பி6 இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண்களில் உள்ள திசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்களை பாதுகாக்கிறது.