கல்யாணத்திற்கு பிறகு பிரச்சினை வராமலிருக்க ,பீரியட்ஸ் நேரத்தில் இந்த பிரச்சினையை அலட்சியப்படுத்தாதிங்க

 
periods

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.

உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்தால், அது கவலைக்குரியது. அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு PCOS, தைராய்டு, எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் நார்த்திசுக்கட்டிகளின் தவறான செயல்பாடு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.


மாதவிடாய் பிடிப்புகள் இருப்பது இயல்பானது. ஆனால் உங்கள் மாதவிடாய் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுமானால், மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் அதிக அளவு புரோஸ்டாக்லாண்டின்கள், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை அடங்கும்.

மாதவிடாய் உறைவு என்பது இரத்த அணுக்கள், இரத்தத்தின் துணை பொருட்கள், சளி மற்றும் கருப்பையின் புறணி மற்றும் இரத்தத்தில் உள்ள புரதங்களின் கலவையாகும்

மாதவிடாய் காலம் நீளமானதாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது ஒழுங்கற்ற மாதவிடாய் என்றழைக்கப்படுகிறது. மாதவிடாயின் முதல் அல்லதுஇறுதி நாளிலிருந்து அடுத்த மாதவிடாய் ஆனது 24 நாட்களுக்கு உள்ளாகவோ அல்லது 38 நாட்களுக்கு மேலாகவோ இருந்தால் அது ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும்.

மாதவிடாய் சுழற்சி ஆனது ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு இடையிலும் அடுத்த மாதவிடாய் சுழற்சி 46 நாட்களாகவும் மீண்டும் அடுத்த சுழற்சி 25 நாட்களுக்கும் வருவதும் ஒழுங்கற்ற சுழற்சி ஆக கணக்கில் கொள்ளப்படும்.இவர்கள் தொடர்ந்து இந்த சுழற்சியை அறிந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இதிலும் இளவயது பெண்களுக்கும் ஃப்ரீ மெனோபாஸ் பெண்களுக்கும் இயல்பானவை. பருவவயதை கொண்டிருக்கும் பெண்களுக்கு அவை சீரான மாதவிடாய் வருவதற்கான காலம் ஆகலாம். குறைந்தது அவர்கள் பருவமடைந்து முதல் இரண்டு வருடங்கள் வரையாவது மாதவிடாய் சுழற்சி அற்று இருக்கும். இது இயல்பானது என்பதால் இவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.


அசாதாரண ரத்தபோக்கு

மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய அதிகப்படியான ரத்தபோக்கு போன்று மாதவிடாய் காலங்கள் அல்லாத நிலையில் வரக்கூடிய ரத்தபோக்கும் கவனிக்க வேண்டியதே இது பெரும்பாலும் இளம் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சனை அல்ல, மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்கள் தான் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

மாதவிடாய் இன்மை

எப்படி அதிக உதிரபோக்கு பிரச்சனைக்குரியதாக சொல்லப்படுகிறதோ அதே போன்று உதிரபோக்கே இல்லாத நிலையும் கூட பிரச்சனைக்குள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமினோரியா என்று அழைகப்படுகிறது.