பருத்தி பால் குடிச்சா, படுத்தி எடுக்கும் கொரானா முதல் குடல் புண் வரை அடிச்சி விரட்டலாம்.

 
cotton seed milk cotton seed milk

நமது முன்னோர்கள் உணவே மருந்தாக கருதினார். முந்தைய கால கட்டத்தில் நமது முன்னோர்கள் தேநீருக்கு பதிலாக அருந்தியது பருத்தி பால் தான்.

தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலைப் பால், கொள்ளுப்பால், பருத்திப்பால் போன்ற அனைத்தும் விதைகளிலிருந்து அரைத்து எடுக்கப்படும் பால் வகையாகும்.

 

அந்த வகையில் ஒன்றுதான் பருத்திப்பால். பருத்திப்பாலிற்கு மதுரை பெயர் போன்ற ஊர். மதுரையில் எங்கெங்கு பார்த்தாலும் பருத்திப்பால் கடைகள் இருக்கும்.

உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால்

 

பருத்திப்பால் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலும், வலுவும் கிடைக்கின்றது.

பருத்தி பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.

அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது.

ஒரு சிலருக்கு மாட்டுப்பால் அலர்ஜி இருக்கும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் பருத்திப்பால் தாராளமாக குடிக்கலாம்.

ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது இந்த பருத்திப்பால்.

இந்த பருத்திப்பால் மாதவிடாய் சுழற்சியை சரி செய்கின்றது.

அல்சர் மற்றும் உணவுப்பாதையில் புண்கள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பால் குடித்து வருவதன் மூலமாக புண்கள் குணமாகும்.

நன்றாக கோதுமையினை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை பாலுடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலமாக கை கால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்றவை குணமாகும்.

பருத்தி பாலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

இதில் தேங்காய் பால் பருத்திப்பால் பச்சரிசி கருப்பட்டி வாதம் ஆகியவை சேர்க்கப்படுகின்றது. கருப்பட்டி சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

மேலும் உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கின்றது பருத்திப்பால் உடலுக்கு வலுவையும் அதிகரிக்கின்றது பருத்திக்கொட்டை வயிற்றில் இருக்கக்கூடிய உங்களை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

செய்முறை :

6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.

பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.

கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.

தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.

 

அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.