அளவுக்கதிகமாக பாராசிட்டமால் எடுத்து கொண்டால் என்ன பக்க விளைவு ஏற்படும் தெரியுமா ?

 
tablet tablet

எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

பாராசிட்டமாலை மிக பாதுகாப்பான மருந்தாக கருதும் போக்கு மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்அலோபதி என சொல்லப்படும் ஆங்கில மருத்துவ முறையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசிய மருந்துகளில் பாராசிட்டமாலுக்கு முதலிடம். உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்தும் இது தான். இந்த நொடி கூட உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் இருப்பவர்கள் பாராசிட்டமாலை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

PARACETAMOL-STORY

எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

கொரோனா தொற்றுநோய்களின் போது பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு சாதனை படைத்துள்ளது. பாராசிட்டமால் ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல் - உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமாலை மிக பாதுகாப்பான மருந்தாக கருதும் போக்கு மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

மருத்துவர் ஆலோசனையின் படி அளவோடு எடுத்துக் கொண்டால் பாதிப்பு இருக்காது. ஆனால், அதனை மிக அதிக அளவில் தினமும் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முன்னதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது. இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எடின்பர்க் பல்கலைக்கழக வல்லுநர்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை கொண்ட 110 நோயாளிகள் ஆய்வில் சேர்க்கப்பட்டனர்.

நோயாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு, நாள் ஒன்றுக்கு நான்கு முறை பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பிறகு பரிசோதித்தபோது, ​​இந்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய வந்தது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இந்த நோயாளிகளுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் 10 பேரில் ஒருவர் நாள்பட்ட வலிக்கு தினசரி பாராசிட்டமால் எடுத்துக்கொள்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள பெரியவர்களில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.