சுவாச பிரச்சினையுள்ளவர்கள் பப்பாளி சாப்பிட்டா என்னாகும் தெரியுமா ?

 
asthma

பப்பாளி பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக அடங்கியுள்ளது ,மேலும் இந்த பழத்தில் சுவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அடங்கியுள்ளது ,இந்த கொரானா காலத்தில் அந்த வைரசை எதிர்க்க பலரும் இந்த பழத்தினை உணவாகவே எடுத்து கொண்டனர் .இதில் செரிமான சக்தி முதல் புற்று நோய் எதிர்ப்பு வரை அடங்கியுள்ளது .

papaya

அதிக அளவு பப்பாளி பழம் எடுத்துக்கொள்வது குறையாத ரத்த சர்க்கரை அளவை குறைத்து டயாபடீக்ஸ் பேஷண்டுகளின் ஆரோக்கியம் காக்கப்படுவதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நீரிழிவு நோய்க்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு சில பக்க விளைவுகளை தருவதாக   சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது எனவும் ஒரு கருத்து நிலவுகிறது .அப்படி மருந்து எடுத்துக்கொள்ளாதவர்கள் இதை சாப்பிடலாம்

ஒரு சிலருக்கு சில பழங்களை சாப்பிடும் பொழுது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அப்படி பப்பாளி ஒரு சிலருக்கு அலர்ஜியை  ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது .அதிக அளவில் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக அளவு பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது.எனவே எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்