தினம் பனங்கிழங்கு சாப்பிட்டா ,ஆஸ்பத்திரிக்கு பணமே செலவு செய்ய வேணாமாம் .

 
panankizhngu

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

மருத்துவம் குணங்கள்  நிறைந்த பனங்கிழங்கின்  மகத்துவம் panang kilangu benefits in tamil கிழங்கு வகைகள் பனங்கிழங்கு நன்மைகள் பனங்கிழங்கு தீமைகள் பனங்கிழங்கு குறிப்புகள் பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு பனங்கிழங்கு வேக வைக்கும் முறை

ஏனெனில், பனங்கிழங்கில் உள்ள குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள், உடலின் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, பனங்கிழங்கால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக (Health Benefits) பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து (Fibre Benefits) இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

பனங்கிழங்கில் பாதமைப் போன்ற உயர்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், பணககாரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்ற சொலவடை  உண்டு.

உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்.

அதேபோல, ப‌னங்கிழங்கு உடலுக்கு குளுமையைத் தரக்கூடியது என்பதால், குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனங்கிழங்கூ சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே, பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்ட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்..