பலநாள் பல் கூச்சத்தை பத்தே நிமிஷத்தில் பறந்தோட செய்யலாம் வாங்க .

 

மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்.

பற்களின் உருவத்தையும், அவை அமைந்திருக்கும் இடத்தையும் பொறுத்து அவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.
பல் கூச்சம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு தருணத்தில் இதை உணரவே செய்கிறார்கள். இந்த பல் கூச்சத்தை போக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

பல் கூச்சம். குளிர்ந்த அல்லது அமிலத்தன்மை வாய்ந்த ஒன்றை வெளிப்படுத்தும் போது இந்த உணர்திறன் பற்கள் உருவாகிறது. இது வலிமிகுந்ததும் கூட .இதற்கு மருத்துவசிகிச்சை அவசியம் என்றாலும் தவிர்க்க முடியாத நேரங்களில் வீட்டு சிகிச்சை சிறிது நிவாரணம் அளிக்கும்.
பல் கூச்சம் இருக்கும் போது தேங்காயெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாய்க்குள் வைத்து பற்கள் முழுவதும் படும்படி சுழற்றி பிறகு வெளியே துப்பவும். தினமும் காலை வேளையில் இதை செய்து வரலாம்.

பல் வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் இந்த பற்கூச்சம் வந்தால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நமது நாக்கு பட்டாலோ அல்லது நாம் உண்ணும் உணவு அந்த பல்லின் மீது பட்டாலோ அல்லது பானம் அதில் பட்டாலோ சட்டென பற்கூச்ச‍ம் ஏற்பட்டு, நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். பல நேரங்ளில் பேசும்போதுகூட இந்த பற்கூச்சம் ஏற்படுவதுண்டு. இந்த பற்கூச்சத்தைப் போக்க எளிதான கைவைத்தியம்  உண்டு.

வாயில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினா விதையை போட்டு நன்றாக மென்று கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு மெல்லும்போது புதினை விதையில் உள்ள சத்து, கூச்சம் எடுக்கும் பல்லின் பட்டு பட்டு விரைவில் பற்கூச்சம் காணாமல் போகும்.

 இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினாவை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதன் இலையை வெயில் படாத இடத்தில் காய வைத்து பின்பு அத்துடன் உப்புத்தூள் சிறிது சேர்த்து பல் தேய்த்தால் இரண்டொரு நாளில் பற்கூச்சம் காணாமல் போகும்.