பக்க வாதம் வராமல் பக்காவா பாதுகாக்கும் இந்த பழத்தை இப்படி சாப்பிடுங்க

 
orange fruits benefits orange fruits benefits

பழங்களில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில பழங்கள் மட்டும் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அப்படியான ஒரு பழம் தான் “ஆரஞ்சு” பழம். தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுகின்றனர்.

orange

ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு மலட்டுதன்மை நீங்கவும், ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் வழிவகை செய்கிறது. 
இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. 
ஆரஞ்சு பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 
ஆரஞ்சு பழம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. 
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் இரண்டு ஆரஞ்சு பழ சுளைகள் சாப்பிடுவது அவசியமாகும். அல்லது மதிய வேளைகளில் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து அருந்துவதும் நல்ல பலனை தரும். 

குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இதய நோய்த்துறை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் படி, பக்கவாத பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் இதய நோய்கள் வராமலும் காக்க உதவுகிறது.

ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.

ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்