வெங்காயம் ,பூண்டு தோலின் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சா அதை ஒதுக்கி வைக்காம பதுக்கி வைப்பிங்க

 
Health Benefits of Garlic


    


வெங்காயம் மற்றும் பூண்டு தோலில் நம் உடலுக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது 
வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் மூலம் நமக்கு என்ன நன்மைகள் என்பதை அறிந்து கொள்வோம். 

வெங்காயத் தோலினை  கொதிக்கவைத்து, அந்த தண்ணீரை ஆறவைத்து,விடுங்கள் .பின்னர்  தலைமுடிக்கு ஷாம்பு போட்டு முடியை இந்த வெங்காய நீரில் கழுவினால், கூந்தல் கொட்டாமல் பளபளன்னிருக்கும் .

onion thol benefits

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள் .பின்னர் இந்த பொடியை இட்லி தோசை சாதத்திற்கு போட்டு சாப்பிட்டால் மிகவும் டேஸ்டாக இருக்கும் 

 அடுத்து வெங்காயம் மற்றும் பூண்டை தோலுடன் தண்ணீரில் வேகவைத்த நீரில் உங்கள் கால்களை வைத்தால் அரிப்பு போன்ற பிரச்சனை நீங்கும் 
சாதம் வடிக்கும்போது அதில் சில வெங்காய தோல்களை சேர்த்து சமைக்கும்போது அது சாப்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. 

 ஒரு சிறிய மெல்லிசாண   காட்டன் துணியில் பூண்டு தோலை வைத்து, முடிச்சு போல கட்டிக்கொள்ள வேண்டும். இதை உங்களுடைய தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கலாம். அப்படி துவங்கும் போது அந்த பூண்டு தோளில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்தை நீங்கள் சுவாசித்தால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகி ஆரோக்கியம் மேம்படும் 

வெங்காய தோலை நீரில் போட்டு அதனை 10 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைத்த பின்னர் அந்த நீரில் சர்க்கரை சேர்த்து குடித்தால் ஆரோக்கியம் மேம்படும் .
ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்கவைக்கப்ட்ட நீருக்குள் வெங்காயத்தோலை  போட்டு அதனை இறுக்கமாக மூடி வைக்கவும். அந்த நீரை கால் மணி நேரம் கழித்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்