தொப்புளில் இப்படி எண்ணெய் வைச்சா ,இத்தனை நோய்களை வச்சி செய்யுமாம் .
பொதுவாகவே நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சினைகள் தீருவதாக மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.
எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும்.
அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம். உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
இவ்வாறு தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும். சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.
நல்லெண்ணெய்: உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.
கடுகு எண்ணெய்: கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வேப்ப எண்ணெய்: சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்ப எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வரவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இந்த வேப்பெண்ணை சரிசெய்துவிடும்.


