என்னது ,எண்ணெய் தேச்சி குளிப்பதால் உடலுக்கு இவ்ளோ நன்மையா ?

 
Coconut Oil

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும். வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

தூசு மற்றும் அதிக உஸ்ணம் போன்றவை நமது உடலை பாதிக்காமல் இருப்பதற்கு நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

bath

1.பெண்களுக்கு:

பெண்கள் பேன் மற்றும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மேலும், முடி நன்றாக வளர பயன்படுகிறது.

2.மன அழுத்தத்தைக் குறைக்க:

எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் நினநீர் சுரப்பிகள் சுருசுருப்பாக செயல்படும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).

உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
தோல் மென்மையாகும்.
தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.
தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம்.