ஒரு பாக்கெட் ஓட்ஸில் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நன்மைகள்

 
oats

ஓட்ஸில் இருக்கும் பீட்டா குலுக்கன் என்கிற பொருட்கள் நம் இதயத்தின் தமணிகளை பாதுகாக்கிறது .இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் நமக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது .மேலும் இது எடை குறைப்பு ,சர்க்கரை நோய் கட்டுப்பாடு ,மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு 

ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் உதவும். மேலும் இதில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்சிடென்ட் உள்ளது. இது LDL விஷத்தன்மைக்கு எதிராக போராட கூடியது. எனவே கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஓட்ஸுடன் வைட்டமின் சி உள்ள பழங்களை சேர்த்து கொள்வது நல்லது.

ஓட்ஸ்


 சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நீரிழிவு நோயாளிகள் உட்படுத்தபடுகின்றனர். ஓட்ஸில் நிறைந்திருக்கும் பீட்டா குலுக்கன் எனப்படும் அதே வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும்

நோய்எதிர்ப்பு சக்திக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது .
இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் பீட்டா-க்ளுக்கான்கள் உள்ளது.இது நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை இது அதிகரிக்கிறது. இதில் உள்ள நுண்ணயிர் எதிர்ப்பி நம்முடைய உடலில் ஏற்படும் நுண்ணயிர் தொற்றுக்களை எதிர்த்து போராடும் வலிமை பெற்றது.எனவே நமக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

ஓட்ஸை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த உறை கட்டியை கரைத்து இரத்த ஓட்டத்தை சீராகும். இதனால் இரத்த கொதிப்பு குறையும்.எனவே தினமும் உணவின் ஓட்ஸ் மற்றும் முழு தானிய உணவுகளை சேர்த்து கொண்டால் இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ஓட்ஸ் பயன்கள் பலவற்றில் முக்கியமானது எடை இழப்பில் உதவுவது ஆகும். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்து கின்றன. இதன் மூலம் உணவின் அளவைக் குறைக்கிறது.

மேலும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது. இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.